• Jan 19 2025

Shocking Eviction Confirm வெளியேறியது இவரா? எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பிரபலம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்  டிவியில் உலக பிரபலத்தால் நடத்தப்பட்ட பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை வெற்றிகரமாக தொட்டு விட்டது.

இந்த பரபரப்பான நிலையில் யார் வின்னர் என்ற பெரிய குழப்பம் ரசிகர்கள் மத்தியில் வாக்குவாதமான பதிவுகளும் எழுப்பப்பட்டன . 

பிக் பாஸ் சீசன் 7  பங்கு பற்றி தற்போது டைட்டில் வின்னருக்கான இறுதிக் கட்டம் வரை முன்னேறியவர் தான் மாயா கிருஷ்ணன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பல சர்ச்சைகளில் சிக்கிய போதும், அவரது நோக்கம் ஒன்றாகவே காணப்பட்டது. இதனால் பல்வேறு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.


எனினும், பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றிய பிரதீப்க்கு, ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட சம்பவத்தில் மாயாவுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவே, பலர் அவரை வெறுக்கின்றனர். 

இந்த நிலையில், மாயா கிருஷ்ணன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் என எக்ஸ் தளத்தில் பிரபலர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.


தற்போது குறித்த தகவல் வைரலாகி வருகின்றது. எனினும், இதன் உண்மை தன்மை என்னவென்று அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

எனினும், குறித்த பிரபலம் ஏற்கனவே விசித்ரா வெளியேறிய போது முதலில் அறிவித்து இருந்ததாகவும் அது உறுதியான நிலையில், அது போலவே மாயா வெளியேற்றமும் இருக்குமா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement