• May 18 2026

சேயோன் ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீர் சர்ச்சை..! CM விஜய் பற்றி எஸ்கே சொன்ன அந்த ஒரு விஷயம்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன், மதராஸி  திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றன. தற்போது இவருடைய நடிப்பில் சேயோன் திரைப்படம் ரெடியாகி வருகிறது.

சேயோன் படத்திற்கான ஷூட்டிங் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக சேயோன் படக்குழுவினர் மதுரைக்கு விரைந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், சேயோன் பட ஷூட்டிங்கிற்காக மதுரைக்கு சென்ற சிவகார்த்திகேயனிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுத்துள்ளனர். அதில் அவர் சேயோன் படத்தின் ஷூட்டிங் பற்றி தெரிவித்ததோடு, தமிழக முதல்வர் விஜய் பற்றியும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பான காணொளியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதன்படி அவர் பேசியது:


சேயோன் ஷூட்டிங் இன்னைக்கு தொடங்குது. ஒரு சிறப்பான படமா வரும். அதுக்கான உழைப்பை கொடுக்குறதுக்கு மொத்த டீமும் ரெடியா இருக்கோம். நம்ம ஊரு பக்கம் வந்து படம் பண்ணுறது ரொம்ப சந்தோஷம். அதிலும் இந்த படம் தாய்க்கிழவி டைரக்டரோட பண்றதுன்றது கூடுதல் சிறப்பு.

மேலும், மதுரைக்குன்னு ஒரு பவர் இருக்கு. அந்த பவர் குறையாம இந்த படம் இருக்கும். அந்த மாதிரி எடுக்கணும்னு நினைக்கல, ஆனா எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி ஒரு படம் பண்ண முயற்சி செய்வோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்வர் விஜய் பற்றி கூறுகையில், எங்க துறையில இருந்து ஒரு முதல்வர் வந்து இருக்காரு, அது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.

நான் முதல் நாளே அவரு ஜெயிச்ச உடனே போன் பண்ணி பேசினேன். அதே அமைதியோடதான் பேசினாரு. ‘நல்லா இருக்கீங்களா’ன்னு கேட்டுட்டு வாழ்த்துக்களை வாங்கிட்டாங்க. அவர் எதை எடுத்தாலும் சிறப்பா செய்வாரு. இதுவும் அப்படிதான் இருக்கும் அப்படின்னு நான் நம்புறேன்.. என தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement