• Apr 26 2024

தளபதி 67 படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பது குறித்து நடிகை ப்ரியா ஆனந்த் என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வாரிசு என்னும் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி வசூலிலும் அள்ளிக் குவித்து வருகின்றது.இதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பானது  கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  நேற்று வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 


இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குநராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். இந்த படத்தின் வசனங்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இயக்குநர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.


  இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை ப்ரியா ஆனந்த் நடிக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரத்யேக போஸ்டரில், "தளபதி 67 படத்தில் நடிப்பது த்ரில்லாக உள்ளது. ஒரு அற்புதமான படக்குழுவினருடன் பணிபுரிவதை எதிர்நோக்கி உள்ளேன்" என பிரியா ஆனந்த் கூறியுள்ளார் என அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement