• Feb 26 2025

சைந்தவி எனக்கு ரொம்ப special..! ஜி .வி பிரகாஷ்குமார் உருக்கம்..

Mathumitha / 6 hours ago

Advertisement

Listen News!

பிரபல இசையமைப்பாளர் தனது பள்ளி தோழியான பிரபல பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அழகிய பெண் குழந்தை இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று கொண்டு வாழ்கின்றனர். என்னதான் பிரிந்து இருந்தாலும் தாங்கள் எப்பொழுதும் தொழில் ரீதியில் சேர்ந்து வேலை செய்கின்றனர்.


சமீபத்தில் இருவரும் இணைந்து மேடை ஒன்றில் பங்கேற்றது இணையத்தில் செம வைரலாகி ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது. இவர் நடிகை திவ்யா பாரதியுடன் உறவில் இருப்பதாக வெளியாகி வரும் வதந்திகளுக்கு இருவரும் விளக்கம் அளித்திருந்தனர்.


இந்நிலையில் தற்போது நேர்காணல் ஒன்றில் " ஜி .வி பிரகாஷ்குமார் இசையில் யார் பாடினாலும் ஜி.வி ,சைந்தவி ஜோடி இணைவது போன்று இருப்பதில்லை அதற்கான காரணம் என்ன ?" எனும் கோபிநாத்தின் கேள்விக்கு இவர் "இளையராஜா இசையில் எல்லாரும் பாடி இருப்பாங்க ஆன sb பாலசுப்ரமணியம் ,ஜானகி மேம் சேர்ந்து பாடும் பாடல்கள் எவ்வளவு ஹிட் ஆகும் அது போலதான் நாங்கள் இருவரும் இதனால் அவங்ககூட பணியாற்றுவது ரொம்ப special " என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement