• Dec 04 2023

வாரிசு படத்தின் சென்சர் சான்றிதழ்...வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்...!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என பல நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

மேலும் இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இப்படத்தின் ட்ரைலர் நாளை மாலை வெளியாகும் என தகவல் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறுஇருக்கையில் , வாரிசு படம் இன்று சென்சார் செய்யப்பட்டு இப்படத்தின் யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  அது மட்டுமின்றி வாரிசு படத்தின் மொத்த ரன் டைம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் என்றும் தெரியவந்துள்ளது.

நேற்று சென்சார் ஆன துணிவு திரைப்படம் யு/ஏ சான்றிதழை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இந்த பொங்கல் க்ளாஷ் மிகப்பெரிய அளவில் இருக்கப்போகிறது. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement