• Jan 26 2026

"ஜனநாயகன்" படத்திற்கு தணிக்கை சான்று வழங்க வாய்ப்பில்லை.. சென்சார் போர்ட்டு மேல்முறையீடு.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த படங்களில் ஒன்றான விஜய் நடிப்பில் உருவாகிய “ஜன நாயகன்” தற்போது சென்சார் சான்றிதழ் தொடர்பான சர்ச்சையின் மையமாக உள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக வேண்டும் என அறிவிக்கப்பட்ட இப்படம், சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றதாக சென்சார் வாரியம் கூறியதால், தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் தடைப்பட்டது. இதன் பின்னணி மற்றும் நடப்பு நிலைமை, ரசிகர்கள் மற்றும் திரையரங்குகளுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் சில காட்சிகள் சமூகத்துக்கு ஆபத்தானவையாக இருக்கலாம் என்ற காரணத்தால், சென்சார் வாரியம் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி ஒரு உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி, படம் மறு ஆய்வுக்காக அனுப்பப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது. 


இதன் மூலம், படம் தற்போதைய நிலையில் ரிலீஸ் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர், தயாரிப்பாளர் நிறுவனம் கே.வி.என். (KVN) பிரொடக்ஷன்ஸ், இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடர்ந்தார். 

சென்னை ஐகோர்ட்டில் நடைபெறும் வழக்கில், நீதிபதி பி.டி.ஆஷா முதலில் ஜனவரி 7 ஆம் தேதி விசாரணை நடத்தினார். அதன்பிறகு, வழக்கு மீண்டும் விசாரணைக்கு உட்பட்டது, இன்று (ஜனவரி 9) தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இன்றைய விசாரணையில் நீதிபதி பி.டி.ஆஷா வெளியிட்ட தீர்ப்பில், மறு ஆய்வுக்காக அனுப்பிய உத்தரவை ரத்து செய்து.. யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பு, படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கும், தயாரிப்பு குழுவுக்கும் மிகப் பெரிய மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தது.

தீர்ப்பின் பிறகு, சென்சார் வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது. அதாவது, நீதிமன்றம் உத்தரவிட்ட யு/ஏ சான்றிதழ் உடனடியாக கிடைக்காது என்று குறிப்பிட்டுள்ளது. இது குறித்த விசாரணை மதியம் இடம்பெற உள்ளது.

Advertisement

Advertisement