• Apr 15 2026

மம்முட்டியின் “பிரம்மயுகம்” படத்திற்கு கிடைத்த உலகளாவிய மரியாதை... என்ன தெரியுமா.?

shali / 3 months ago

Advertisement

Listen News!

நடிகர் மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள “பிரம்மயுகம்” திரைப்படம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெறவுள்ள Where the Forest Meets the Sea என்ற சிறப்பு திரையிடலில் தேர்வாகி  இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த தேர்வு இந்திய திரைப்படங்கள் மற்றும் நாட்டுப்புற கதைகளை அடிப்படையாகக் கொண்ட படங்களுக்கு முக்கியமான ஒரு சாதனை என பார்க்கப்படுகிறது.


இந்த சிறப்பு திரையிடல், அமெரிக்காவில் ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியத்தில் நடைபெறுகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படங்களை இந்த அரங்கில் திரையிடுவர். குறிப்பாக, நாட்டுப்புற கதைகள், கலாச்சார மரபுகள், திகில் மற்றும் பரபரப்பை அளிக்கும் படங்கள் இந்த திரையிடலில் இடம்பிடித்துள்ளன.

முக்கியமாக, இந்த பிரிவில் திரையிட தேர்வான முதலாவது இந்திய படம் “பிரம்மயுகம்” ஆகும். இதன் மூலம் தமிழ் மற்றும் இந்திய திரைப்படங்கள் உலக திரை அரங்குகளில் சிறந்த தரத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement