• Mar 25 2026

''NO MEANS NO.. புரிஞ்சா சரி..'' இது கணவர் தினேஷ்க்கு பகிந்த செருப்படி பதிவா? ரட்சிதாவின் எல்லை மீறும் சூட்சுமம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் சின்னத்திரையில் 'பிரிவோம் சந்திப்போம்' என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தான்  நடிகை ரட்சிதா. அதே தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். 

எனினும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து ஆகவில்லை.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7இல் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் வீட்டிற்குள் நுழைந்த தினேஷ், இறுதி சுற்றில் எவிக்ட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


எனினும், பிக் பாஸ் வீட்டில் மனைவி ரட்சிதாவுக்காக நேற்றைய தினம் பாட்டுப்பாடி எல்லாம் அசத்தி இருந்தார்.

இந்த நிலையில், நடிகை ரட்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினேஷ்க்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.


அதன்படி அதில் அவர் கூறுகையில், 'NO MEANS NO ... தெரிஞ்ச பொண்ணா இருந்தாலும், தெரியாத பொண்ணா இருந்தாலும், கேர்ள் பிரண்டா இருந்தாலும், லவ்வரா இருந்தாலும், ஏன் மனைவியா இருந்தாலும் அவங்க நோ சொன்னா நோ தான் ' என போஸ்ட் ஒன்றை பகிந்துள்ளார்.

அதன்படி, பிக் பாஸ் வீட்டில் இருந்து தினேஷ் வெற்றியோடு வந்தாலும் அவர் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்பது போல போஸ்ட்டை மறைமுகமாக போட்டுள்ளார் ரட்சிதா.


Advertisement

Advertisement