கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் தனது அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அதற்கு முன்னர் அவர் உருக்கமாக பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
பிரபல கன்னட நடிகரான சிவராஜ்குமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர் விரைவில் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்கிறார் என தகவல் வெளியானது. அந்த தகவல் உண்மையா? வதந்தியா? என ரசிகர்கள் குழம்பி இருந்த நிலையில் அமெரிக்காவுக்கு செல்லும் முன்பு செய்தியாளர்களை சந்தித்த சிவராஜ்குமார் தன் சிகிச்சை பற்றிய விபரங்களை அவரே கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் " அமெரிக்காவில் இருக்கும் மயாமி புற்றுநோய் மையத்தில் டிசம்பர் 24ம் தேதி எனக்கு அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது. டாக்டர் முருகேஷ் என். மனோகர் தான் எனக்கு அறுவை சிகிச்சை செய்யவிருக்கிறார். அவர் மிகவும் பிரபலமான மருத்துவர், கைராசிக்காரர். அவரிடம் பேசியபோது எதற்கும் பயப்படாதீங்க, எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று சொல்லியுள்ளார்" என்று கூறினார் .
மேலும் "ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். கடந்த 2 நாட்களாக எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் எல்லாம் நல்லபடியாக இருக்கிறது. அது எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறது. ஜனவரி 26ம் தேதி இந்தியாவுக்கு வந்துவிடுவேன்" என்று கூறியுள்ளார். இந்நிலையில் இவர் அமெரிக்காவிற்கு செல்லும் முன்னர் பிரபலங்கள் அவரின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். அத்தோடு ரசிகர்களும் அவருக்கு ஆறுதலாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
Listen News!