• Jan 18 2025

நடிகை தீபிகா படுகோன் கர்ப்பம்.. குழந்தை எப்போது பிறக்கும் என்றும் அறிவிப்பு..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ள நிலையில் குழந்தை எப்போது பிறக்கும் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் என்பவரை திருமணம் செய்தார். இந்த திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடந்த நிலையில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் திருமணம் முடிந்து 6 ஆண்டுகள் கழித்து தற்போது தீபிகா படுகோன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் குழந்தைகள் விளையாடும் பொருட்களை பதிவு செய்து நடுவில் தீபிகா - ரன்வீர் என்றும் செப்டம்பர் 2024 என்றும் பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து தீபிகா கர்ப்பமாக இருப்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளதோடு செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதையடுத்து ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தீபிகா படுகோன் தற்போது பிரபாஸ், கமல்ஹாசன் நடித்து வரும்கல்கி 2898 ஏடிஉள்பட ஒரு சில படங்களில் நடித்து வருவதால் அவர் தனது பகுதியின் படப்பிடிப்புகளை உடனடியாக முடிக்குமாறு இயக்குனர்களிடம் வலியுறுத்தி வருவதாகவும் வரும் மே மாதத்திற்கு பிறகு அவர் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் கூறப்படுகிறது.



Advertisement

Advertisement