• Apr 15 2026

'போடினு சொல்லு' நிக்சனுக்கு ஏத்திவிட்ட பூர்ணிமா! அவமானத்திலும் சிரித்துக்கொண்ட விசித்ரா

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. 

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

இறுதியாக பிக்பாஸ் வீட்டில் நடந்த பூகம்பம் டாஸ்கில் ஹவுஸ் மேட்ஸ் தோற்றதால் இரண்டு போட்டியாளர்கள் வெளியே செல்வதும், அவர்களுக்கு பதிலாக இரண்டு போட்டியாளர்கள் உள்ளே வருவதும் உறுதியானது.


அதன்படி, வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் விஜய் வர்மா மற்றும் அனன்யா பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே நுழைய, அக்‌ஷயா மற்றும் பிராவோ ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர்.

அதேபோல, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக ஜோவிகா நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு, வெளியேறினார். 

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போது வழங்கப்பட்டுள்ள பொம்மை டாஸ்கை வைத்து விசித்ராவை பங்கமாக சக போட்டியாளர்கள் கலாய்த்து வருகின்றனர்.

அதன்படி, பொம்மையாக நிற்கும் விசித்ராவிடம் 'போடி' சொல்லுமாறு பூர்ணிமா, நிக்சனிடம் சொல்லி அனுப்ப, அவரும் விசித்ரா பக்கத்தில் சென்று போடி, போடி என மீண்டும் மீண்டும் சொல்லுகிறார்.

இவரை தொடர்ந்து, ரவீனா நாய் மாதிரி பண்ணு என்ன நிக்சனுக்கு சொல்ல அவரும் 'வொவ் வொவ்' என கத்துகிறார். இதோ குறித்த வீடியோ.. 


Advertisement

Advertisement