• Jan 19 2025

'லவ் யூ அஜித் சார்..' வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களுக்கு ஓடிச்சென்று உதவிய அஜித்! நெகிழ்ச்சிப் பதிவு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சில மணி நேரங்களுக்கு முன் நடிகர் விஷ்ணுவிஷால் தனது டுவிட் பக்கத்தில் 'எனது வீட்டிற்குள் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, காரபாக்கத்தில் நீர் மட்டம் மோசமாக உயர்ந்து வருகிறது. இங்கு மின்சாரம் இல்லை, வைஃபை இல்லை, ஃபோன் சிக்னல் இல்லை இமொட்டை மாடியில் மட்டும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எனக்கு சில சிக்னல் கிடைக்கும் சென்னை முழுவதும் உள்ள மக்களுக்காக நான் பிராத்திக்கிறேன்' என குறிப்பிட்டிருந்தார்.  


இதை தொடர்ந்து, சென்னை காரப்பாக்கத்தில்  விஷ்ணுவிஷால் மற்றும் அமீர் கான் குடும்பத்தாரையும் தீயணைப்பு குழுவினர் காப்பாற்றியுள்ளார். அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்ட அவர், 'சிக்கித் தவிக்கும் எங்களைப் போன்ற மக்களுக்கு உதவிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நன்றி, காரப்பாக்கத்தில் மீட்புப் பணிகள் தொடங்கியுள்ளன.. ஏற்கனவே 3 படகுகள் செயல்படுவதைப் பார்த்தேன். இதுபோன்ற சோதனைக் காலங்களில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது' என டுவிட் செய்துள்ளார். 


இந்நிலையில், அமீர் கானும் இவ்வாறு வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதை  தெரிந்துகொண்ட நடிகர் அஜித், அவருக்கு நேரில் சென்று உதவி செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அமீர் கானை விசாரித்த அஜித், எல்லோருக்கும் போக்குவரத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார். இதற்கு நன்றி கூறும் விதமாக போட்டோ ஒன்றுடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார் விஷ்ணு விஷால்,

குறித்த பதிவில், 'எங்கள் நிலை பற்றி பொதுவான நண்பர் மூலம் அறிந்த, எப்போதும் உதவக்கூடியவரான நடிகர் அஜித் சார், எங்கள் வில்லா நண்பர்களுக்கு போக்குவரத்து உதவிகளை ஏற்பாடு செய்தார். லவ் யூ அஜித் சார்' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement