• Jan 18 2025

Bigg Boss Tamil Season 8 Contestant List; பால் டப்பா முதல் ஷாலினி ஜோயா வரை.. களமிறங்கும் போட்டியாளர்களின் லிஸ்ட்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 8 இல் பங்கு பற்ற உள்ள போட்டியாளர்கள் யார் யாரென இன்றைய தினம் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பிக் பாஸ் 8ல் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.

அதன்படி சினிமா தயாரிப்பாளரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ  செய்பவருமான ரவீந்தர் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன்பு சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த விடயம் பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது. ஆனாலும் தற்போது வரையில் அவர்கள் இருவரும்  ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகிறார்கள்.


தமிழ் சினிமாவில் பாண்டவர் பூமி, மறுமலர்ச்சி உள்ளிட்ட படங்களில் நடித்து தற்போது சீரியல்களிலும் நடித்து வரும் நடிகர் ரஞ்சித் பிக் பாஸ் 8ல் கலந்து கொள்ள உள்ளார். இவர் சமீப காலமாகவே காதல் திருமணங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி விமர்சனத்திற்கு உள்ளானார்.


செல்லம்மாள் சீரியல் நடிகரான அர்னவ் இந்த சீசனில் களமிறங்க உள்ளார். இவர் தனது மனைவி திவ்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிறைக்கு சென்று வந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.


பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமானவர்தான் அருண். இவர் சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி எடுத்து இருப்பதாக சொல்லுகின்றார்கள். அத்துடன் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனாவும் இவரும் காதலிப்பதாக கிசு கிசுக்கப்படுகின்றது.


ஆரம்பத்தில் ஆங்கராக இருந்து தொடர்ந்து சீரியலில் கலக்கி வந்தவர் தான் தீபக். அதன்படி தென்றல் சீரியலில் தொடங்கி சமீபத்தில் முடிவடைந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து சினிமாவிலும் நடித்து வருகின்றார்.


பிரபல ராப் பாடகர் பால் டப்பா இவரும் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளார். இவரது இயற்பெயர் அனீஸ். இவர் சினிமா ஆடியோ லாஞ்சுக்கு கூப்பிட்டால் வர மறுக்கின்றார் என்ற  குற்றச்சாட்டுக்கு உள்ளான பாடகர்.


மானாட மயிலாட நிகழ்ச்சியினால் மிகவும்  பிரபலமானவர்தான் கோகுல் நாத். இவர் நடனப்பள்ளி நடத்திக் கொண்டே சினிமா தேடலில் காணப்படுகின்றார். சமீபத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.


சின்னத்திரையில் பரவலாக தெரிந்தவர் தான் வி.ஜே. விஷால். ஏற்கனவே இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றி  இருந்தார்.


கதை திரைக்கதை வசனம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவன் தான் சந்தோஷ் பிரதாப். இவர் சார்பட்டா பரம்பரை, கொன்றால் பாவம் போன்ற சில படங்களில் நடித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பற்றினார்.


விஜய் டிவி தொகுப்பாளராகவும் சீரியல் நடிகையாகவும் காணப்படும் ஜாக்குலின் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளார். இவர் கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.


தென்றல் வந்து என்னைத் தொடும்'  என்ற தொடரின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பவித்ரா ஜனனி. இந்த தொடர் சர்ச்சையை கிளப்பியது. எனினும் அதன் பின்பு இவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்ததாகவும் சொன்னார்கள்.


குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கி சீரியல், சினிமா என நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சக்சனா இறுதியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் நடித்திருந்தார். இவரும் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளார்.


குக் வித் கோமாளி உள்ளிட்ட விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு பிரபலமானவர்தான் சுனிதா கோகோய். இவர் ஒரு டான்ஸராகவும் காணப்படுகிறார்.


சீரியல் நடிகை அன்ஷிதாவும் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளார். இவர் செல்லம்மா சீரியலில் அர்னவுடன் சேர்ந்து நடித்தார். இவரால் தான் அவருடைய மனைவிக்கும் அர்னவுக்கும் இடையில் பிரச்சனை உருவாகினதாக கூறப்படுகிறது.


சீரியல் நடிகை தர்ஷா குப்தா இந்த சீசனில்  கலந்து கொள்ள உள்ளாராம். இவர் போட்டோ ஷூட் செய்து சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பார்.


மலையாள நடிகையான ஷாலினி சோயா விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றியிருந்தார். இதனால் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் அடைந்தார். இவர் இந்த சீசனில் கலந்து கொள்வதாக ஆரம்பத்தில் இருந்தே தகவல்கள் கசிந்தது.


தர்பார், ஆதித்ய வர்மா உள்ளிட்ட சில படங்களில் நடித்த  சௌந்தர்யா நஞ்சுண்டன் இந்த சீசனில் பங்கு கொள்ள உள்ளார்.


இறுதியாக சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் பிரபலமான ஐஸ்வர்யா இந்த சீசரின் கலந்து கொள்ள உள்ளார்.


Advertisement

Advertisement