• Jan 19 2025

பிக்பாஸ் சீசன் 8 டைட்டிலை வின் பண்ண விஜய் டிவியின் 3 முக்கிய பிரபலங்களுக்கு வாய்ப்பு?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒவ்வொரு ஆண்டும் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இதில் டான்ஸ், கலை, நடிப்பு சாங் என எல்லா துறைகளிலும் சிறந்த விளங்குபவர்களிடம் இருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து மொத்தமாக 18 போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைப்பார்கள்.

அதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவராக மக்களின் விருப்பத்தின் படி வெளியேற்றப்பட்டு கடைசியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட நபர் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார். இதுவரையில் பிக் பாஸ் டைட்டில் வின்னராக 7 பேரை அறிவித்துள்ளது விஜய் டிவி.

பிக் பாஸ் எட்டாவது சீசன் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர் சந்திரசேகர், அர்ணவ், தர்ஷா குப்தா, தர்ஷிகா, ரஞ்சித், தீபக், விஜே ஆனந்தி, சத்யா, சாச்சனா, பவித்ரா, முத்துக்குமரன், ஜாக்குலின், அருண், அன்ஷிதா என்று 18 போட்டியாளர்கள் இடம் பெற்றனர்.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 15 போட்டியாளர்கள் மத்தியில் பிக் பாஸ் டைட்டிலை வின் பண்ணக்கூடிய போட்டியாளர்கள் யார் என்ற கணிப்பு வெளியாகி உள்ளது. 


அதன்படி முதலாவது இடத்தில் முத்துக்குமரன் காணப்படுகின்றார். இவர் சிறந்த தமிழ் பேச்சாளராக காணப்படுகின்றார். இதன் காரணத்தினாலே பிக் பாஸ் வீட்டில் யாருடைய மனதையும் காயப்படுத்தாமல் தனது கேமை சிறப்பாக விளையாடி மக்களை கவர்ந்து வருகின்றார

இதை தொடர்ந்து இன்ஸ்ட்டா பிரபலமும் சீரியல் நடிகையுமான தர்ஷிகா காணப்படுகின்றார். இவரும் டைட்டில் வின்னராக வருவதற்குரிய வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. இவரைத் தொடர்ந்து தொகுப்பாளராக ஆரம்பித்து அதன் பின்பு சீரியல் நடிகரான தீபக் சிறப்பாக விளையாடி வருவதால் இவருக்கும் பிக்பாஸ் டைட்டில் வின் பண்ணுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.

இறுதியாக அடிக்கடி சண்டை சச்சரவில் சிக்கி தன்னை ஆக்டிவாக வைத்திருக்கும் ஜாக்குலின் எலிமினேஷனில் தப்பி தப்பி வருகின்றார். இதன் காரணத்தினால் இவரும் பிக் பாஸ் டைட்டிலைட் வின் பண்ணுவதற்குரிய வாய்ப்பு காணப்படுகின்றது.

Advertisement

Advertisement