• Apr 02 2025

பிக் பாஸ் பூர்ணிமா முஸ்லீமாக நடித்த திரைப்படத்தின் சூப்பர் அப்டேட்! ரசிகர்கள் கொண்டாட்டம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளரான பூர்ணிமா நடித்துள்ள திரைப்படம் தான் 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே' இந்த திரைப்படம் நாளைய தினம்( மார்ச் 8) வெளியாகவுள்ளது.

திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிப்பில் சித்தார்த் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ திரைப்படம் மூலமாக இயக்குநர் பிரசாத் ராமர் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினார்.


‘அருணகிரி பெருமாளே’ என்ற ஆன்மிக ஆவணப்படத்திற்காக அறியப்பட்ட பூர்வா புரொடக்ஷன்ஸ் என்ற தனது சொந்த பேனரில் ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தைப் பிரபல பாடகர்-இசையமைப்பாளர் பிரதீப் குமார் தயாரித்துள்ளார். 


இந்த திரைப்படம் நாளைய தினம் 75 திரையரங்குகளில் வெளியாகிறது. இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்தும் பாசிட்டிவாக பேசும் படம்தான் இது. 


அத்துடன், இந்த படத்தில் செந்தூர் பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாக, ப்ரீத்தி கரண் கதாநாயகியாக இதில் நடித்துள்ளார். இவர்களுடன் சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement