ரசிகர்கள் மத்தியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியானது அதிகம் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வரும் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 8 துவங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 8 மற்றும் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் சீசன் 18 துவங்கியது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர்கள் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி ரூ. 60 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது.
விஜய் சேதுபதிக்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல் ஹாசன் தனது 7வது சீசனுக்காக ரூ. 130 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என தகவல் கூறப்படுகிறது. அதே போல் தெலுங்கு பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நாகர்ஜுனா ரூ. 30 கோடி சம்பளமாக வாங்குகிறாராம்.
மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 18 தொகுத்து வழங்குவதற்காக சல்மான் கான் ஒரு மாதத்திற்கு ரூ. 60 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார்கள் என்கின்றனர். ஒரு மாதத்திற்கு ரூ. 60 கோடி எனும் கணக்கில் மூன்று மாதத்திற்கும் மேல் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்காக சல்மான் கான் ரூ. 180 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது.
Listen News!