• Sep 03 2026

ரெடின் கிங்ஸ்லியுடன் கூட்டணி அமைத்த பிக்பாஸ் பிரபலம்.. கோலிவுட்டில் உருவாகும் புதிய காம்போ

shali / 2 months ago

Advertisement

Listen News!

ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலட்சுமி, யாஷிகா ஆனந்த், ஒய்.ஜி.எம். மதுவந்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படமான 'லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. 

இந்தப் படத்தை இயக்குநர் கே.ஆர். செந்தில் நாதன் இயக்குகிறார். பூஜை நிகழ்ச்சியில் படக்குழுவினர், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


விளையாட்டை மையமாகக் கொண்டு, நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்து உருவாகும் படமாக 'லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி' உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ள ரெடின் கிங்ஸ்லி, இந்தப் படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதேபோல், ரச்சிதா மகாலட்சுமி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோரின் கதாபாத்திரங்களும் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த முழு விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement