இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் நல்ல நடிகை என்ற பெயரை பெற்ற சிறந்த நடிகை ஸ்ரீதேவி ஆவார். இவ்வாறு பல திரைப்படங்களில் முன்னணியாக நடித்து இந்திய அளவில் பிரபலமாக இருந்த இவர் துபாய் சென்றபோது மர்மமான முறையில் மரணமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் பிறந்த இவர் "துணைவன்" திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாத்துறைக்குள் வந்து "மூன்றுமுடிச்சு" திரைப்படத்தின் ஊடாக கதாநாயகியாகவும் அறிமுகமானார். தொடர்ந்து இந்திய அளவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் இறுதியாக நடித்தது விஜயின் புலி திரைப்படத்தில் ஆகும்.
இந்த நிலையிலேயே இவரது சினிமா பயணத்தையும் சினிமா துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளையும் திரைப்படமாக எடுப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் "அவரது பயோ பிக் உருவாக்க நான் உயிரோடு உள்ளவரை விடமாட்டேன்" என ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் கூறியுள்ளார். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது
Listen News!