• Jan 19 2025

குழந்தையை தொட்டிலில் போட்டாச்சு...! ஆனா அம்மாவ காணோம்! பாக்கியலட்சுமி பங்க்ஷன் போட்டோ

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது புதிய அத்தியாயத்துடன் ஒளிபரப்பாகி வருகின்றது.

பாக்கியலட்சுமி சீரியல் கதாநாயகியாக காணப்படும் பாக்கியா, தனது குடும்பத்தை தலைமை தாங்கும் ஒரு பெண்ணாக காணப்படுகிறார். இவர் கணவரை விவாகரத்து பெற்ற நிலையில், அவரின் தாய், தந்தையுடன் ஒற்றுமையாக வாழும் ஒரு சிறந்த கதாபாத்திரமாக காணப்படுகிறார்.

பாக்கியலட்சுமி இதுவரையில் தனது குடும்பமும் தனது தொழிலும் என இருந்து வந்த நிலையில், தற்போது பாக்யாவுக்கு நண்பராக காணப்பட்ட பழனிச்சாமி பாக்கியா மீது காதல் வயப்பட்டு உள்ளார். இதன் காரணமாக இனிவரும் நாட்களில் பாக்கியாவிற்கும் அவர் மீது எதுவும் ஈர்ப்பு இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதே சமயம் பாக்கியாவின் முதல் கணவரான கோபி, பாக்கியாவை விவாகரத்து செய்து ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். அவரும் தற்போது அம்மா, அப்பாவுடன் பாக்கியா இருக்கும் வீட்டிலேயே காணப்படுகிறார்.


இந்த சீரியலில் தற்போது ராதிகா கர்ப்பமாக இருப்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது. இதை தொடர்ந்து வரும் நாட்களில் ராதிகாவின் கர்ப்பம் பற்றி வீட்டார் என்ன சொல்லுவார் என்றும், கோபி இதனால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் விறுவிறுப்பாக நோக்கலாம்.

இந்த நிலையில், தற்போது பாக்கியலட்சுமி சீரியல் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனிவரும் எபிசோடுகளுக்கான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


அந்த புகைப்படங்களை பார்க்கும்போது பங்க்ஷன் ஒன்று நடைபெற்றதாக தோன்றுகிறது. அதன்படி ஜெனியின் பிள்ளைக்கு பெயர் சூட்டி தொட்டிலில் போடும் விழா இதுவரையில் நடக்காத நிலையில், அதற்கான பங்க்ஷன் இனிவரும் நாட்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் குறித்த புகைப்படத்தில் கோபி பாக்கியாவுடன் இணைந்து எடுத்த போட்டோவும் வெளியிட்டுள்ளார். எனவே இதன் கதை களம் எவ்வாறு நகரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதேவேளை, குறித்த புகைப்படத்தில் ஜெனியின் குழந்தையை தொட்டிலில் போடுவது போல புகைப்படங்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement