• Sep 20 2024

கேப்பிரில்லாவை தொடர்ந்து ஆஜித்திற்கு குவியும் வாழ்த்துக்கள்-இது தான் விசயமா..? வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நெதர்லாந் நாட்டின் ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது இந்தியாவில் முதலில் ஹிந்தியில் அறிமுகம் செய்யப்பட்டது.எனினும் அதனை தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் நடத்தப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 6 சீசன் முடிந்துள்ளது.

இவ்வாறு இருக்கையில் பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ஆஜித். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆன அவர் அதற்கு பின் பிக் பாஸ் மூலமாக மேலும் புகழ் பெற்றார். தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் ஆஜித் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஆஜித் புது கார் வாங்கி இருப்பதாக போட்டோ வெளியிட்டு இருக்கிறார். அவர் Skoda Slavia என்ற காரை வாங்கி இருக்கிறார்.

மேலும் அந்த காரின் டாப் மாடல் 22 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

புது கார் வாங்கி இருக்கும் ஆஜித்துக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Advertisement

Advertisement