• May 18 2024

சமந்தா கெட்டப்பில் அசத்தும் குக்வித்கோமாளி சிவாங்கி-வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சிவாங்கி.

பாடகி பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான சிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்தான் முதலில் கலந்துக்கொண்டார் என்றாலும் , இவருக்கு அதிக அளவிலான பிரபலத்தை ஏற்படுத்திக்கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.

மேலும் அந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களை நிறைவடைந்ததை அடுத்து தற்போது மூன்றாவது சீசனும் ஒளிபரப்பாகி வருகின்றது.அதிலும் சிவாங்கி கோமாளியாக அசத்தி வருகிறார்.

அது மட்டுமலாமல் ஆல்பம் பாடல்கள் பாடுவது, திரைப்படங்களில் நடிப்பது , சினிமாவில் பாடல்கள் பாடுவது என படுபிஸியாக இருக்கிறார் சிவாங்கி.தற்போது கூட சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்துள்ளார்.

இதற்கிடையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் கோமாளியாக போடும் கெட்டப் போட்டோக்களையும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ஷேர் செய்து வருவார். அந்த வகையில் தற்போது “தெறி” படத்தில் வரும் சமந்தாவை போல அச்சு அசலாக கெட்ட போட்டிருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இதனை ரசிகர்கள் ரசித்துப் பார்த்து வருவதோடு இணையத்தில் வைரலாக்கியும் வருகின்றனர்.

பிற செய்திகள்

Advertisement

Advertisement