மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இரண்டு ஆண்டுகளின் பின்னர் சூர்யா நடிப்பில் வெளியாகிய கங்குவா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி படு தோல்வியினை சந்தித்தது.குறித்த சம்பவத்தின் பின்னர் சூர்யா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் படப்புடிப்பு தளங்களில் அவர் மிகவும் சோகமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது.
தற்போது இவர் இரண்டு படங்களில் நடித்து வருகின்றார்.குறித்த ஒரு படத்தின் டீசர் மற்றும் தலைப்பு இன்று வெளியாகியிருந்தது.இந்நிலையில் இவரது 45 ஆவது படத்தினை rj பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகின்றார்.எதற்கும் துணிந்தவன் மற்றும் ஜெய்பீம் படங்களினை போன்று இதிலும் சூர்யா அவர்கள் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து வருவதுடன் இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகின்றார்.
இவை தவிர்ந்து தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது அதாவது இப்படத்தில் இயக்குநரான பாலாஜியும் வக்கீலாக நடிக்கவுள்ளதாகவும் குறித்த கதாபாத்திரத்தில் அவரது பெயர் "பேபி கண்ணன் "என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!