• May 30 2026

‘நாகபந்தம்’ படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியீடு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ‘நாகபந்தம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த மர்மத் திரில்லர் படத்தில் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகை நபா நடேஷ் 'பார்வதி' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சமீபத்தில் மகா சிவராத்திரி நாளை முன்னிட்டு ‘நாகபந்தம்’ படத்தின் டீசரை நடிகர் மகேஷ் பாபு வெளியிட்டார். இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், படம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இந்நிலையில், ‘நாகபந்தம்’ படத்தின் முதல் பாடல் (First Single) புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த புரோமோ சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

மேலும், இந்த படத்தின் முழு பாடல் வரும் 15ஆம் தேதி காலை 11:11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ‘நாகபந்தம்’ படத்தின் அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement