எல்லாரும் என்ன மன்னிச்சிருங்க போனவாரம் தான் இது நடந்தது உங்ககிட்ட எல்லாம் சொல்ல மறந்துட்டேன் என ஒரு அதிர்ச்சியான தகவலை தனது இன்ஸ்ராகிராம் வாயிலாக கூறியுள்ளார் பிக் பாஸ் பாலாஜி. இதனை பார்த்த பலரும் அதிர்ச்சியாகி உள்ளனர். அப்படி என்ன நடந்தது என பார்ப்போம் வாங்க.
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு பற்றி இரண்டாவது ரன்னர் அப் ஆனா பாலா தற்போது பல சில படங்களில் நடித்து வருகிறார். இவர் அடாவடியாக பேசுவது, அடிதடியில் இறங்குவதுக்கும் ரொம்பவும் பேமசானவர். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சில் கலந்து கொண்டு வெற்றி பெறாவிட்டாலும் பிக் பாஸ் அன்லிமிட்டட் நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றி பெற்றார்.
மாடலிங்கில் சிறந்து விளங்கும் இவர் தற்போது தனது இன்ஸராக்கிராம் பக்கத்தில் மணமகன் கோலத்தில் கழுத்தில் மாலையுடன் மணமேடையில் மணப்பெண் அருகில் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் பெண்ணின் முகம் பரிவாக இருக்கும் படி பகிர்ந்த இவர் எல்லாரும் என்ன மன்னிச்சிருங்க போனவாரம் தான் இது நடந்தது உங்ககிட்ட எல்லாம் சொல்ல மறந்துட்டேன் என்று கூறி புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.
இந்த படத்தினை பார்த்த பலரும் இதனை உண்மையில் பாலாவுக்கு திருமணம் நடந்து விட்டது என்று நினைத்தனர். ஆனால் அந்த ஒரு படத்திற்காக எடுக்க பட்டு இருக்கலாம். அதுமட்டும் இல்லாமல் இன்று ஏப்ரல் 1 அதுனால எங்க முட்டாள் ஆக்குறதுக்காக இப்படி செய்து இருக்காரு என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Listen News!