இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. மேலும் இன்னும் இரண்டு நாட்களில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதால் இந்த படத்திற்கான பிரமோஷன் தாறுமாறாக இடம் பெற்று வருகின்றன.
இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, ஜோகி பாபு, சினேகா, மீனாட்சி சவுத்ரி, மோகன், லைலா, அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இதன் காரணத்தினாலே இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் காணப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு வருடத்தில் நடித்துள்ளார்.
அண்மையில் மறைந்த விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தின் ஊடாக இதில் காட்சிப்படுத்த உள்ளார்கள். அது மட்டும் இன்றி விஜய் இளமையாக காட்டுவதற்கு ஏஜிங் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

யுவன் சங்கர் ராஜா இசையில் இதுவரை கோட் படத்திலிருந்து நான்கு பாடல்கள் வெளியாகி உள்ளன. அதில் விஜய் - சினேகா காம்போவில் இடம் பெற்ற பாடலைத் தவிர ஏனைய பாடல்கள் சுமாரான வரவேற்பை தான் ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. ஆனாலும் இந்த பாடல்கள் தியேட்டரில் பார்க்கும்போது திருவிழா போல கொண்டாடுவீர்கள் என பிரேம்ஜி பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், கோட் படத்தின் பட குழுவினர் ப்ரோமோஷன்காக ஹைதராபாத் சென்றார்கள். இதன் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் வெங்கட் பிரபு. தற்போது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
The selfie from #TheGoat Telugu press meet in hyd!! Thank q @MythriOfficial #theGreatestOfAllTime from September 5th @archanakalpathi @aishkalpathi @actorprashanth @thisisysr @actor_vaibhav @Premgiamaren @actress_Sneha @Meenakshiioffl #laila pic.twitter.com/EgiHBKtk8i
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!