• Jan 19 2025

உண்மையை போட்டுடைத்த முத்து... திகைத்து போய் நின்ற ரோகிணி... அதிர்ச்சியின் உச்சத்தில் விஜய்யா... விறுவிறுப்பான சிறகடிக்க ஆசை சீரியல்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி சீரியலில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க  ஆசை சீரியலில் நாளை என்ன நடக்க போகிறது என பார்ப்போம் வாங்க.


முத்துக்கு பெண்ணொருவர் கால் பண்ணி பாலருக்கு செல்கிறார். அங்கு அவர் ரோகிணியின் பாலருக்கு செல்ல, குறித்த பெண்ணும் முத்துவுக்கு காசு கொடுக்காமல் செல்கிறார்.இதை தொடர்ந்து முத்து, இது ரோகிணியின் பாலர் ஆச்சே என செல்கிறார். பிறகு காசு கேட்பதற்காக உள்ளே செல்கிறார்.


அங்கு சென்று பார்த்தால் விஜய்யா பெயரில் பாலர் இல்லை என்பதும் கடை ரோகிணிக்கு சொந்தமாக இல்லை என்பதும் முத்துக்கு தெரிய வருகிறது. அதனை தொடர்ந்து முத்து வீட்டிற்கு வந்து தனது அப்பாவிடம் கூறுகிறார் அம்மா பெயரில் கடை இல்லை  கூறி ஆதாரத்தையும் காட்டுகிறார். 


அதனை பார்த்த முத்துவின் அப்பா உண்மைக்குமா என ஷாக்காகி இருக்கிறார். அப்போது பாலரில் இருந்து வந்த ரோகிணியை பார்த்து விஜய்யா நானும் உன் கடைக்கு வாறன்என் பெயரில் தானே கடையும் இருக்கு என்று கூறுகிறார். 


அதனை கேட்டு முத்து சிரித்து கொண்டே அப்பாவிடம் கூறுகிறார். அப்போது முத்துவின் அப்பா ரோகிணியிடம் கதைக்க வேண்டும் என பேச்சை தொடங்கி பாலர் விஜய்யா பெயரில் இல்லையா? நீயும் பாலரில் வேலை தான் செய்றதாக கேள்விபட்டன் உண்மையா என்று கேட்கிறார்.  ரோகிணி திகைத்து நிற்கிறார் அப்போது விஜய்யா என்னமா சொல்லுற பார்லருக்கு  என்னாச்சி என் பெயரில் பார்லர் இல்லையா ? என்று கேட்கிறார்.

Advertisement

Advertisement