• Jan 26 2026

பிரச்சனை வந்துரும்னு கூப்புட்டு பார்த்திருப்பார் போல! மீண்டும் மஞ்சுமல் பாய்ஸ்க்கு ரஜனி பாராட்டு!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் சாதிக்க துடிக்கும் பல இளைஞர்களின் முன்னோடியாக இருபவர் நடிகர் ரஜனி காந்த் ஆவார். இவர் பொதுவாகவே சிறிய படங்களாக இருந்தாலும் நல்ல படமாக இருந்தால் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி அவர்களை உட்சாகப்படுத்துவார்.


அவ்வாறே சமீபத்தில் சிதம்பரம் இயக்கத்தில் வெளிவந்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த மலையாள திரைப்படமான மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்தவர்கள் மற்றும் அதன் இயக்குனரையும் நேரில் அழைத்து பாராட்டியிருந்தார்.


இவ்வாறு இருக்கையிலேயே சமீபத்தில் குறித்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த தமிழ் நடிகர் விஜய் முத்துவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினரை பாராட்டிய போது மலையாளிகளுக்கு ரஜனி ஆதரவளிக்கின்றார் என பலர் விமர்சித்து வந்த நிலையிலேயே ரஜனி இவ்வாறு செய்துள்ளார் என நெட்டிசன்கள் சர்ச்சையை ஏற்படுத்தியும் வருகின்றனர். 

Advertisement

Advertisement