• May 20 2024

சிம்பு இணைந்த மறுநாளே ரூ.60 கோடி வருமானம்.. ‘தக்லைஃப்’ கமல்ஹாசன் மகிழ்ச்சி..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

கமல்ஹாசனின் ‘தக்லைஃப்’ திரைப்படத்தில் சிம்பு இணைவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இந்த படத்தின் மூலம் 60 கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் கூட டெல்லி அருகே உள்ள அனுமார் கோயிலில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டம் நடித்து வரும் நிலையில் நேற்று முதல் சிம்பு இணைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை வியாபாரம் முடிவடைந்துள்ளது.  இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை ரூபாய் 60 கோடிக்கு பிசினஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

‘தக்லைஃப்’ படத்தில் சிம்பு இணைந்த மறுநாளே 60 கோடி ரூபாய் இந்த படத்தின் மூலம் வருமானம் கிடைத்துள்ளதை அடுத்து தயாரிப்பாளர்களில் ஒருவரான கமல்ஹாசன் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் இன்னும் இந்த படத்தின் பிசினஸ் அதிக அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் சிம்புவுக்கும் இந்த படம் அவருடைய திரை உலக வாழ்வில் ஒரு திருப்பத்தை கொடுக்கும் என்றும் ’செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்புவின் கேரக்டர் போலவே இந்த படத்தில் அவருக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர் என்பதால் இந்த படம் நிச்சயம் சிம்புவின் ரசிகர்களுக்கு ஒரு பெரும் விருந்தாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement