• Jan 18 2025

வெளியவந்துட்டு பேசுற! சுத்த வேஸ்ட்டு... வனிதா புயலிடம் சிக்கிய அர்னவ்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 8 சமீபத்தில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் முதல் வாரம் ரவீந்தர் வெளியேறிய நிலையில் இரண்டாம் வாரம் நடிகர் அர்னவ் வெளியேறி விட்டார். 


இந்நிலையில் அவர் தற்போது பிக் பாஸ் அன்லிமிடெட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுபவர்களை வைத்து முன்னர் சீசன் பிக் பாஸ் பிரபலங்களுடன் எதிர் எதிராக கேள்விகளை கேட்பார்கள்.


இம்முறை  நிகழ்ச்சியில் பங்கு பற்றிய நடிகர் அர்னவ்வுடன் வாதிட நடிகை வனிதா விஜயகுமார் வந்திருந்தார்.அப்போது தொகுப்பாளர் அர்னவ் பண்ணதில் மிக பெரிய தப்புனா எது பிக் பாஸ் போனது தவிர என்று கேட்டார்.


அதற்கு வனிதா வேஸ்டு, நாங்க என்ன எதிர் பார்த்தமோ அத பண்ணல, வெளிய வந்துட்டு மேடையில பேசுறாரு அப்போ உள்ள என்ன பண்ணுன? நான் உள்ள இருந்து இருந்தா பளார்னு ஒன்னு கொடுத்திருப்பேன் என்று கூறுகிறார்.


இதற்கு அர்னவ் இதான் நான், என் இயல்பு அப்டி தான், நான் இப்படித்தான் பண்ணுவான் என்று கூறுகிறார். இதோடு ப்ரோமோ முடிவடைகிறது. எப்படியும் பலவாறு கேள்விகளை கேட்டு வனிதா விளாசி இருப்பார்.  



Advertisement

Advertisement