• Apr 30 2026

தவெக கட்சி மாநாட்டில் வீர மங்கை வேலு நாச்சியார் கட் -அவுட்..? இணையத்தை கவர்ந்த போட்டோஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்  எதிர்வரும் அக்டோபர் 27ஆம் தேதி முதல் மாநில மாநாட்டை நிகழ்த்த உள்ளார். இதற்கான ஏற்பாட்டு பணிகள் சிறப்பாகவும்  விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றது. இதில்  தமிழ்நாட்டில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் கலந்து கொள்வதற்காக தீவிரமாக தயாராகியுள்ளனர்.

கடந்த மாதத்திலேயே தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு அது குறைவான நேரத்தின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இந்த மாநாடு நடப்பு மாதத்திற்குள் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் இடத்தில் தொண்டர்கள் அமர வைக்கப்பட்டுள்ள பகுதியில் விஜய் நடந்து வருவதற்காகவே தனி பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. மழை பெய்தாலும் திடலுக்குள் மழை நீர் உள்ளே வராமல் இருக்க தரையின் அடி சுமார் 3 அடி வரை உயர்த்தப்பட்டுள்ளது.


அது மட்டும் இன்றி தொண்டர்களின் பாதுகாப்புக்காக 500 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், 300 டேங்கர் லாரிகள் குடிநீர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், உணவு உள்ளிட்ட அடிப்படை கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டுக்கு வைக்கப்பட்டுள்ள கட்டவுட்டில் வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள், கர்மவீரர், பெரியார்,  அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்டவர்கள் காணப்படுகிறார்கள். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.



Advertisement

Advertisement