• Apr 15 2026

கள்ளிப்பால் ஊத்தி அர்ச்சனாவ கொல்ல சொன்னிங்களே...? திடீரென கேள்வி எழுப்பிய அர்ச்சனாவின் அப்பா! முழி பிதுங்கி நின்ற நிக்சன்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பித்து தற்பொழுது 79 நாட்களைக் கடந்து, வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

தற்போது, பிக் பாஸ் சீசன் 7 இல் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த அர்ச்சனாவின் அப்பா, நிக்சன் அர்ச்சனாவை பார்த்து பேசிய வார்த்தைக்கு விளக்கம் கேட்டு அதிரடி காட்டியுள்ளார்.


அதாவது, சில தினங்களுக்கு முன்பு அர்ச்சனாவுடன் சண்டை போட்ட நிக்சன், அர்ச்சனாவுக்கு கள்ளிப்பால் ஊத்தி கொன்னுருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். இதனை குறிப்பிட்டே அர்ச்சனாவின் அப்பா நிக்சனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன்படி அவர், கள்ளிப்பால் ஊத்தி அர்ச்சனாவை கொன்னுருக்க வேண்டும் என்று சொன்னிங்களே...? அதைக்கேட்டு நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம் என்று சொல்ல...அதற்கு நிக்சன் என்னது நானா அப்படி சொன்னனா? நான் எப்பவாவது காமெடிக்கு சொல்லி இருப்பேன் என்று வழக்கம்போல நழுவிச் சென்றுள்ளார். குறித்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.


Advertisement

Advertisement