பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் மறைந்து இன்றுடன் நான்கு நாட்கள் நிறைவடைந்துள்ளது. அவருடைய மறைவு தொடர்பிலான கருத்துக்கள் இன்னும் இணையதளங்களில் உலா வந்து கொண்டுள்ளன. ரசிகர்களும் அவருடைய பழைய வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்கள்.
சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கருக்கு வெள்ளித் திரையில் ஜொலிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி மாரி, விஸ்வாசம், வேலைக்காரன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார்.
ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பின்பு தனது குடும்பத்தாரின் உதவியுடன் குணமாகி மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் அதற்குள்ளேயே எதிர்பாராத விதத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா அவர் இறந்ததிலிருந்து, அதிலிருந்து மீள முடியாமல் தனது பதிவுகளை பகிர்ந்து வருகின்றார். பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தான் சிறுவயதில் இருக்கும்போது ரோபோ சங்கருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இதை பார்த்த பலரும் இந்திரஜாவுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என தெரியாமல் தங்களது ஆறுதலை பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!