• Oct 05 2024

தளபதி 68 இல் விஜய்யுடன் இணைகிறார் அரவிந்சாமி .வெளியான தகவல்

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா துறையிலே மிகவும் புகழ்பெற்ற இந்திய திரைப்ப நடிகர் அரவிந்சாமி இவர் தெலுங்கு மலையாளம் ஹிந்த போன்ற மொழிகளில் திரைப்படம் நடித்து ஹிட் ஆனவர்


 இவர் ரோஜா, பாம்பே, மின்சார கனவு  இந்திரா தேவராகம் , அலைபாயுதே ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்தவர். அதன் பிறகு அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. நீண்ட வருடங்களுக்கு பிறகு தனி ஒருவன் படத்தில் வில்லனாக ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர்.இவர்  தற்போது கதாநாயகனாக, குணச்சித்திர நடிகர், வில்லன் ஆகிய வேடங்களில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இளையதளபதி விஜய் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் தற்போது இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது வில்லன் கதாபாத்திரமா என்பது குறித்து தெரியவில்லை. ஏற்கனவே இந்த படத்தில் சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

Advertisement

Advertisement