• Jan 18 2025

மனைவிட்ட தான் காசு கேப்பான்.. ஜெயம் ரவி பற்றி சியான் விக்ரம் பகிர் தகவல்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது சர்ச்சைக்குரிய பேசுப் பொருளாக காணப்படுவது ஜெயம் ரவியின் விவாகரத்து பிரச்சனை. ஜெயம் ரவி தனது விவாகரத்தை அறிவித்த பின்பு பல உண்மைகள் வெட்ட வெளிச்சமாகியுள்ளன. அதில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியும்  அவருடைய அம்மாவும் ஜெயம் ரவியை மிகவும் கஷ்டப்படுத்தியதாக தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகிக் கொண்டுள்ளன.

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக காணப்படுபவர் ஜெயம் ரவி. இதுவரையில் எந்த நடிகைகள் உடனும் எந்த ஒரு கிசுகிசுகளும் சிக்காமல் கிளியர் பாயாக இருந்து வருகின்றார். இவர் நடித்து வரும் படங்கள் வெற்றி தோல்வி என இரண்டும் சமமாக காணப்படுகின்றன. ஆனாலும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

சமீப காலமாகவே ஜெயம் ரவி நடிக்கும் படங்கள் தோல்வியை தழுவி வருகின்றன. அதற்கு காரணம் அவர் தனது மாமியாரின் கட்டுப்பாட்டில் இருந்து படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகின்றது. ஆனாலும் தற்போது தனது படங்கள் படுதோல்வி அடைந்ததாக பொய் கணக்கு காட்டியதாக தனது மாமியார் மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இந்த நிலையில், சியான் விக்ரம் ஜெயம் ரவி பற்றி பேசிய தகவல் ஒன்று இணையதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.


அதாவது, தான் எப்போதும் கையில் பர்ஸ் வைத்திருக்க மாட்டேன். தேவைப்படும் போது என் அசிஸ்டன்ட் கிட்ட தான் வாங்கிருப்பேன். நானும் ஜெயம் ரவியும் வெளிநாடுகளில் எப்போதாவது பார்ட்டிக்கு போகும்போது ஏதாவது பணம் தேவைப்பட்டது என்றால், ஜெயம் ரவியிடம் மச்சான் பைசா இருக்கா? என்று கேட்பேன்.

ஆனால் அதற்கு அவர் என்கிட்ட இல்ல அண்ணா என்று சொல்லி தன் மனைவியிடம் இருந்து வாங்கி கொடுப்பார் என்று விக்ரம் பழைய விருது விழா நிகழ்ச்சியில் விளையாட்டாக பேசிய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement