• Nov 09 2025

அத்துமீறய நடிகர் இடவேள பாபு... பாதிக்கப்பட்ட நடிகை... கம்பி என்ன விட்ட போலீஸ்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ஹேமா கமிட்டி வந்ததிலிருந்து, பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என்று யாருமே வெளியில் தலை காட்ட முடியாத நிலைக்கு வந்துள்ளனர். அப்படி தான் இடவேள பாபு. அவர் மீது ஏற்கனவே அந்தரங்க புகார் இருந்து வந்த நிலையில், போலீசார் அவரை கம்பி என்ன வைத்துள்ளனர்.


பாபுவுக்கு எதிராக கடந்த ஆகஸ்டு 28-ந்தேதி எர்ணாகுளம் டவுன் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. மலையாள திரை கலைஞர்கள் கூட்டமைப்பில் உறுப்பினர் ஆவதற்கான விண்ணப்பம் பற்றி ஆலோசனை மேற்கொள்ள நடிகையை நேரில் வரும்படி, பாபு அழைத்துள்ளார். அந்த நடிகை பாபுவின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது, நடிகையை பாபு அந்தரங்க துன்புறுத்தல் செய்து விட்டார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


இந்நிலையில், நடிகை அளித்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி இடவேள பாபுவுக்கு சிறப்பு விசாரணை குழு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதை தொடர்ந்து, நேற்று அவர் ஆஜர் ஆகியுள்ளார், விசாரணையும் நடைபெற்றுள்ளது. சுமார் 3 மணி நேரம் இந்த விசாரணையானது நடந்துள்ளது. இதை தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் கோர்ட்டு ஒன்று, முன்பே அவருக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது என தகவல் வெளியாக்கிருக்கிறது. 





Advertisement

Advertisement