• Oct 08 2024

டான்ஸ் கம்பெட்டிஷனில் செலக்ட்டான இனியாவுக்கு கிடைத்த அதிர்ச்சி! வார்னிங் கொடுத்த பாக்கியா

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், செழியன் குடித்துவிட்டு வந்ததை கேட்டு பாக்யா அவருக்கு திட்டுகின்றார். காரணம் என்ன என்று கேட்கவும், தாத்தாவுக்கு பிறகு நான் தான் இந்த வீட்டிலே ஒரு ஆம்பளையாக உள்ளேன். எல்லாவற்றையும் நான் தான் பார்க்க வேண்டும். அந்த காரணத்தினால்தான் கவலையில் குடித்ததாக சொல்ல, நான் இருக்க மட்டும் வீட்டுப் பொறுப்பை நான் பார்ப்பேன் நீ ஜெனியையும் பிள்ளையும் பார்த்துக் கொள்ளும் என்று வார்னிங் கொடுத்து அனுப்புகிறார் பாக்கியா.

இதைத்தொடர்ந்து ரெஸ்டாரண்டில் பாக்கியா கணக்கு பார்த்துக் கொண்டிருக்க, செல்வி வந்து பேச்சு கொடுக்கின்றார் . ஆனாலும் பாக்கியா உனக்கு வேலை இல்லையா என்று திட்ட , புதுசா வந்த செப் ஒரு வேலையும் செய்ய விடுகின்றார் இல்லை, எல்லோரும்   அவரை சுற்றி நின்று வேடிக்கை தான் பார்க்கின்றார்கள். அவரே எல்லா வேலையும் செய்வதாக சொல்ல, அந்த நேரத்தில் அங்கு வந்த செப் புதிதாக ரசகுல்லா செய்ததாக பாக்யாவுக்கு கொடுக்கின்றார் .

பாக்யா நல்லா இருக்கு என்று சொன்னதோடு இதில் புதுசா என்ன அட் பண்ணுனிங்க என்று கேட்க, அதை சொல்ல மறுக்கின்றார். அந்த நேரத்தில் பழனிச்சாமி அவரைப் பற்றி விசாரிக்கின்றார். ஆனால் அவர் முதலில் சென்னையில் தான் வேலை செய்ததாக சமாளிக்கின்றார் .


மறுபக்கம் இனியா பங்குபற்றிய டான்ஸ் கம்பெட்டிஷனில் ஐந்தாவதாக செலக்ட் ஆகிறார். ஆனாலும் இதை வீட்டில் எப்படி சொல்வது என்று தயங்கிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் எல்லோரும் டான்ஸ் பற்றி கதைக்க உங்களுக்கு டான்ஸ் பிடிக்குமா என்று கேட்டு தான் காலேஜ் காமடிஷனில் செலக்ட் ஆனதாக சொல்லுகின்றார்.

மேலும் இதில் வெற்றி பெற்று அடுத்ததாக டிவியில் நடக்கும் டான்ஸ் ஷோவில் பார்ட்டிசிபேட் பண்ண வேண்டும் என்று சொல்ல, ஈஸ்வரி உடனே அது எல்லாம் வேண்டாம் டிவில வந்தா நல்லா இருக்காது என்று மறுப்பு தெரிவிக்கின்றார். இதனால் இனியா அதிர்ச்சி அடைகின்றார்.

Advertisement