• Dec 05 2023

இந்த ஜென்மத்தில் பிரிந்துவிட்டோம், அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து வாழ்வோம் - விஜய் ஆண்டனி மனைவி

sarmiya / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் ஆண்டனியின் மகள் மீரா, சென்னையில் இருக்கும் ஒரு பிரபல பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த நிலையில்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்நிலையில் மீராவின் தாயார் உருக்கமாக பேசியிருக்கின்றார்.


அவர் மனஅழுத்தம் காரணமாக தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என கூறப்படும் நிலையில் போலீசார் தீவிரமாக தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றையதினம் மீராவின் உடல் நல்லடக்கம் செய்யும் பிரார்த்தனையிலே   பேசிய விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா மகள் பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் எங்களிடம் சொல்லி இருக்கலாம். இந்த ஜென்மத்தில் பிரிந்துவிட்டோம், அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து வாழ்வோம் என உருக்கமாக பேசி இருக்கிறார்.இது மக்கள் அனைவரையும  சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement