• Sep 06 2026

கண்டிப்பா ஆஸ்கர் விருதுதான்... "தங்கலான்" பட நடிகர் மெட்ராஸ் ஜானி நெகிழ்ச்சி...

shali / 2 years ago

Advertisement

Listen News!

தங்கலான் படம் நிச்சியம் வெற்றி அளிக்கும், நடிகர் சீயான் விக்ரம் தன்னுடைய நடிப்பை பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தங்கலான் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தங்கலான் படத்தினை பார்த்த பிறகு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 


நடிகர் விக்ரம் சார் அவர்கள் என்னை பாராட்டியது என் வாழ்க்கையில் மிக முக்கியமாக இருக்கு இத்தனை வருட திரைத்துறையில் ரொம்ப முக்கியமான நாளாக கருதுகிறேன். அந்த திரைப்படத்தில் நடித்ததில் நிறைய விடயங்கள் கற்று கொண்டேன். 


ஜானி கதாபாத்திரம் மெட்ராஸ் திரைப்படத்தில் ஒரு வெற்றியை தந்தது. தங்கலான் திரைப்படத்தில் வரதன் கதாபாத்திரம் வித்தியாசமான ஒன்றாக இருக்கு. இந்த படத்திற்கு ஆஸ்கார் விருது கண்டிப்பாக கிடைக்கணும். அவ்வளோ உழைப்பு இருக்கு அந்தப்படத்துக்காக. ஒட்டுமொத்த டீமும் உளச்சி இருக்காங்க. விக்ரம் சேரோட உழைப்பு இதுல முக்கியமானதாக இருக்கு என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement