சினிமா உலகில் இசைக்கும், பாடல்களுக்கும் ஒரு தனி இடம் உள்ளது. குறிப்பாக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கிய இசை பலரின் வாழ்க்கையையும், கனவுகளையும் மாற்றியமைத்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் தன்னுடைய வாழ்க்கையில் ரஹ்மான் முக்கிய பங்கு வகித்தார் என்று சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில் ஸ்ரீநிவாஸின், தனது இசைப் பயணத்தில் "ஏ.ஆர்.ரஹ்மான்" ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றதுடன் "என் வாழ்க்கையில் ஏ.ஆர்.ரஹ்மான் மிக முக்கியமானவர் " என்றார்.இந்தக் கருத்து ரஹ்மானின் இசையில் வரும் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

மேலும் , இந்த வாழ்க்கையில் ஒருவர் எவ்வளவு உயர்ந்த நிலையையே அடைந்தாலும், தாழ்மையும், ஆன்மீக உணர்வுகளும் மிக முக்கியம் என்றார். இதனடிப்படையில் தான் சுவாமி விவேகானந்தர் கூறிய "Every Soul is Potentially Divine" என்னும் கோட்பாட்டினை தன் வாழ்வின் அடிப்படையாகக் கொண்டுள்ளேன் என்றார்.
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஸ்ரீநிவாஸ் போன்ற பெரியவர்களின் எண்ணங்கள், செயல் மற்றும் தளராத மனநிலை என்பன இன்றும் பலருக்கு வாழ்க்கையின் முக்கியப் பாடமாக திகழ்கின்றது. மேலும் இசை என்பது மனதை இணைக்கும் சுத்தமான சக்தி என்ற ஸ்ரீநிவாஸின் வார்த்தைகள் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றன.
Listen News!