• Mar 03 2025

என்னது கோபிக்கு அடுத்த கலியாணமா...! டுடே பாக்கியலட்சுமி சீரியல் செம எபிசொட்!

subiththira / 12 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி இன்றைய எபிசொட்டில், ஈஸ்வரி பாக்கியாவிடம் என்னும் அவன் உன் மேல இருக்கிற அக்கறையில தானே செய்யுறான் என்கிறார். அதுக்கு பாக்கியா உங்க பையன்ர அக்கறை எனக்கு தேவையே இல்ல அத்தை என்றார். பின் ஈஸ்வரி உன்கிட்ட இப்படி ஒரு மாற்றத்தை கொஞ்சம் கூட எதிர்பாக்கல என்றதுடன் செழியன் தப்பு பண்ணினான் அவன திருத்தி ஜெனி கூட சேர்த்து வச்சனி தானே. அதேமாதிரி தான் கோபியும் திருந்திட்டான் அவனையும் நீ ஏற்று சேர்ந்து வாழலாம் என்றார்.

அதுக்கு பாக்கியா அத்த நீங்க தப்பா நினைக்கிறீங்க செழியன் தப்பு பண்ணப்போ நான் அவன ஏற்கேல ஜெனி தான் ஏற்றால் என்றார். மேலும் உங்க பையனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை வேணும் என்டா அவருக்கு மூன்றாவதா ஒரு கலியாணத்த பண்ணி வையுங்க என்றார். உடனே ஈஸ்வரி கோபத்தில பாக்கியா நீ திமிரிலா ஆடுறா என்கிறார்.


பிறகு செல்வி பாக்கியாவுக்கு நீ பாட்டுக்கு அடுத்த கலியாணத்த பண்ண சொல்லிட்ட அதசீரியஸா எடுத்துக் கொண்டு கலியாணத்த பண்ணினா இன்னொரு பொண்ணோட வாழ்க்கை எல்லோ வீணாகப் போகுது என்று சொல்லுறாள். அதைத் தொடர்ந்து கோபி ரெஸ்டாரெண்டில் எழிலை சந்தித்துக் கதைத்துக் கொண்டிருக்கிறார். அப்ப எழிலை வீட்டுக்கு வருமாறு கூறுகின்றார்.

பின் இனியா ரெஸ்டாரெண்டில வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்க இருந்த லவ் ஜோடிய  பாத்து பீல் பண்ணிக் கொண்டிருக்காள். உடனே ஆகாஷுக்கு கால் எடுத்து கதைச்சிட்டிருக்காள். அப்ப ஆகாஷ உடனே ரெஸ்டாரெண்ட்க்கு வரச்சொல்லுராள். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement