• Jan 19 2025

பிரபல நடிகரின் செஃபுக்கு தினமும் ரூ.2 லட்சம் சம்பளம்.. ’மகாராஜா’ நடிகர் கூறிய அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் படப்பிடிப்புக்கு வரும்போது செஃப் ஒருவரை அழைத்து வருவதாகவும் அவருக்கு தினமும் 2 லட்ச ரூபாய் சம்பளமாக தயாரிப்பாளர் தான் கொடுக்க வேண்டும் என்றும் பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் பேட்டியில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பிரபல நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் அவருடைய மேக்கப் மேன், சிகை அலங்கார நிபுணர் உட்பட பலருக்கும் தயாரிப்பாளர் தான் சம்பளம் கொடுத்து வருகிறார் என்பதும், குறிப்பாக பிரபல நடிகர்களை பாதுகாக்கும் பாதுகாப்பு  நபர்களுக்கும் தயாரிப்பாளர் தான் சம்பளம் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த பாலிவுட் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சமீபத்தில் வெளியான ‘மகாராஜா’ படத்தில் நடித்த அனுராக் காஷ்யப், ‘ஒரு சில உச்ச நட்சத்திரங்கள் தனி செஃப்களை வைத்துக் கொள்வதாகவும் அந்த செஃப்களுக்கு ஒரு நாளுக்கு இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கச் சொல்கிறார்கள் என்றும் விமர்சனம் செய்துள்ளார்.


பிரத்யேகமாக தங்களுக்கு என ஒரு செஃப் வைத்துக் கொண்டால்தான் தங்களுடைய டயட் பிளான் வொர்க் அவுட் ஆகும் என்றும், அதற்கு ஏற்ப அவர்கள் உணவு சமைப்பார்கள் என்றும் எனவே தனி செஃப் அவசியம் என்று தயாரிப்பாளர்களிடம் சில உச்ச நட்சத்திரங்கள் கூறி வருகின்றனர்.

அவர்கள் சாப்பிடும் உணவின் மதிப்பு 500 அல்லது 1000 ரூபாய் தான் இருக்கும், ஆனால் அதை தயார் செய்யும் செஃப்களுக்கு 2  லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டு வருகிறது என்று அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.

மேலும் ஒரு உச்ச நட்சத்திரம் வெகு தூரத்தில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் இருக்கும் பர்கரை தான் தினமும் வாங்கி வரச் சொல்வார் என்றும், அதுவும் தயாரிப்பாளர் பணம் தான் என்றும், தயாரிப்பாளர் பணத்தை உச்ச நட்சத்திர நடிகர்கள் இப்படி வீணடிக்கிறார்கள் என்றும் ஆனால் என்னுடைய படங்களில் இதையெல்லாம் நான் அனுமதிப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement