தெலுங்கு திரைப்படத் துறையில் முன்னணியில் விளங்குபவரே பிரபாஸ். இவர் "வர்ஷம்" என்ற தெலுங்கு படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்து கொண்டார். மேலும் ,மிர்ச்சி , முன்னா ,டார்லிங் மற்றும் மிஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு தெலுங்கில் கலக்கிய பிரபாஸ் தமிழ் நாட்டிலும் பல படங்களை நடித்து மக்கள் மனத்தைக் கவர்ந்துள்ளார். தமிழ் நடித்த பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் கோடிக்கணக்கான வசூலை தயாரிப்பாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தது.
இப்படி பிரமாண்டமான படங்களில் நடித்து வரும் பிரபாஸ் தற்போது "கண்ணப்பா " திரைப்படத்தில் ருத்திரனாக நடித்துள்ளார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பிரபாஸ் இதுவரைக்கும் பார்த்ததை விட ரொம்ப வித்தியாசமான கரெக்ட்டரில் நடித்துள்ளார் என்பது தெரியவருகின்றது.
மேலும் அதில் ருத்திரன் கரெக்ட்டரை " புயலாய் பொங்கி எழும் ருத்திரன்....முக்காலங்களிலும் வழிகாட்டும் ஆதிரன்...பரமசிவனின் கட்டளைப் படி ஆளும் நேத்திரன்..." என்றெல்லாம் போற்றப்படுகின்றமை மக்கள் மத்தியில் படத்தை பார்ப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது. அத்துடன் ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை பாகுபலி போல் பிரமாண்டமாக வரப்போவதாக எதிர்பார்க்கின்றார்கள்.
Listen News!