• Sep 20 2024

சூர்யாவைத் தொடர்ந்து விக்ரம் படத்தில் மறைத்து வைத்துள்ள மற்றுமொரு நடிகர்.. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இந்தத் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விஜய்சேதுபதி, பகவத்பாசில் என்போர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகிய இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் தான் வெளியாகி மிகவும் வைரலானது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தில் சூர்யா கேமியோ தோற்றத்தில் நடித்து இருக்கிறார் என்ற செய்தி இணையத்தில் கசிந்தது. இப் படப்பிடிப்பு வரை லோகேஷ் மறைத்து வைத்திருந்த இந்த விஷயம் ரசிகர்களுக்கு தெரிந்ததால் ட்ரெய்லரில் சூர்யா இடம்பெற்றிருந்த காட்சியை வைத்திருந்தார்.

அத்தோடு விக்ரம் படத்தில் பல சுவாரஸ்யம் தற்போது வரை மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிப்பதாக செய்திகளில் தகவல் வெளியானது.

படக்குழு அதை உறுதிப்பட இன்னும் தெரிவிக்கவில்லை. இதனால் சிவகார்த்திகேயனையும் விக்ரம் படத்தில் லோகேஷ் மறைத்து வைத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளதாம்.மேலும் இப்படத்தின் மூலம் ஏற்பட்ட பழக்கத்தினால் தான் கமலஹாசன் சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது படம் வெளியானால் மட்டுமே ரசிகர்களுக்கு தெரியவரும். ஆனால் கண்டிப்பாக விக்ரம் படம் கமல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அத்தோடு இதை ட்ரெய்லரிலேயே உறுதிப்படுத்தியுள்ளார் லோகேஷ்.

https://www.youtube.com/embed/IpBdOP32lrk

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement