• May 08 2024

ரிலீஸ் முன்பே இத்தனை கோடி சம்பாதித்ததா சிம்புவின் வெந்து தணிந்தது காடு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக நடிகராக அறிமுகமாகி தனக்கென்று முக்கிய இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் தான் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாநாடு திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து இவரின் மார்க்கெட்டை அதிகரித்துள்ளது.

மேலும் இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெந்து தணிந்தது காடு ,பத்து தல போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.

இதில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு 5 விதமான கெட்டப்பில் நடிப்பதாக கூறப்படுகிறது

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வியாபாரம் தொடங்கியுள்ளது. மேலும் இப் படத்திற்கான ஹிந்தி உரிமம் ரூ. 12 கோடிக்கும், இணையதள வெளியீட்டு உரிமத்தை ரூ. 24 கோடிக்கு கேட்டிருக்கிறார்களாம்.

அத்தோடு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ரூ. 12 கோடிக்கு விலைபோனதாகவும், இதுவரை ஆன மொத்த வியாபாரம் சேர்த்து படம் ரூ. 48 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இப்படம் உருவாக ஆன பட்ஜெட் ரூ. 28 கோடியாம்.

https://www.youtube.com/embed/IpBdOP32lrk

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement