• Aug 03 2025

"கூலி" பாடலுக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி.! உருக்கமான பதிவினை வெளியிட்ட அனிருத்!!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் நடிப்பில் தற்பொழுது மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் படம் தான் ‘கூலி’. ஏற்கனவே இப்படம் குறித்த அறிவிப்பும், டீசரும் வெளியாகியதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. தற்போது, இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி, இணையதளத்திலும் இசை ரசிகர்களிடையிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.


இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், இந்த படத்தின் இசையை அமைத்திருக்கிறார். அவர் தற்போது தனது x தளப் பக்கத்தில், தனது பாடலுக்கு ரசிகர்கள் அளித்திருக்கும் பாசத்துக்கும் ஆதரவிற்கும் நன்றியை தெரிவித்திருக்கிறார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.


‘கூலி’ படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் இணையதளங்களில் வெளியிடப்பட்டது. ஒரே நாளில் லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றிருந்தது. இதனாலேயே, தற்பொழுது அனிருத் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement