• May 07 2024

வசூலில் பட்டையைக் கிளப்பும் அனிமல் திரைப்படம்- ஐந்து நாட்களில் மொத்தம் இத்தனை கோடி வசூலா?

stella / 5 months ago

Advertisement

Listen News!

ஹிந்தியில் கடந்த வெள்ளி அன்று ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அனிமல் என்கிற திரைப்படம் வெளியானது. அர்ஜுன் ரெட்டி புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இந்த படத்தை இயக்கியுள்ளார். 

வன்முறை கொஞ்சம் அதிகமாக உள்ள இந்த படம் பெண்களை மட்டம் தட்டும் விதமாகவும் உருவாகியுள்ளது என படம் வெளியான நாளிலிருந்து சோசியல் மீடியாவில் சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


இப்படத்தில் ரன்வீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அனிமல் படம் வசூலில் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது.


இந்நிலையில், இப்படம் வெளிவந்த 5 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 460 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.கண்டிப்பாக 6வது நாள் முடிவில் ரூ. 500 கோடியை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் படக்குழு செம குஷியில் இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement