• Jan 19 2025

நானும் வெள்ளத்துக்குள்ள தான் இருக்கிறேன்,ரொம்ப கஷ்டமாக இருக்கு- சீரியல் நடிகர் தீபக் வெளியிட்ட வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் தீபக். இவர் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சேலஞ்ச் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும் இவர் தென்றல், அண்ணி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது தீபக் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "தமிழும் சரஸ்வதியும்" என்ற சீரியலில் நடித்து வருகிறார்.தீபக் 2008 -ம் ஆண்டு சிவரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அக்னித் மகன் உள்ளார்.


இது ஒரு புறம் இருக்க மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத மழை பெய்ததால் பல்வேறு இங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கின்றது.பல இடங்களில் வீடுகளுக்கு உள்ளும் வெள்ள நீர் புகுந்துவிட்டதால், மக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சில இடங்களில் நீர் வழிந்தோடினாலும் பல இடங்களில் தண்ணீர் அப்படியே நிற்கின்றது.

இது குறித்த வீடியோவை தான் தீபக் போட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,நான் சென்னையின் முக்கிய இடமான அரும்பாக்கத்தில் தான் இருக்கின்றேன். இங்கே எவ்வளவு தண்ணீர் நிற்கின்றது என்று பாருங்க, தண்ணீர் இன்னும் வடியவே இல்லை,வீட்டை விட்டு வெளில போகாதீங்க என்று தான் எல்லோரும் சொன்னாங்க,

ஆனால் என்ன செய்யிறது வேலைக்கு போகனும்,டப்பிங் போகனும் அப்போ தான் சீரியல் ஓடும். எனக்கு பிரச்சினை இல்லை ஆனால் வயசானவங்க,சின்னப் பிள்ளைகள் எல்லாம் எப்படி இந்தத் தண்ணீருக்குள்ளால் போவாங்க அதை நினைக்கும் போது தான் கஷ்டமாக இருக்கு, இந்த தண்ணீருக்குள்ள கரண்ட் இருந்தாலும் தெரியாது அது தான் ரொம்ப பயமாக இருக்கு, எல்லோரும் பாதுகாப்பாக இருங்க, சீக்கிரம் நல்லது நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement