• Apr 30 2024

முதன்முறையாக இந்த காரெக்டரில் நடிக்கும் சிவகார்த்திகேயன்- லீக்கான எஸ்கே 21 திரைப்படத்தின் காட்சி

stella / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர்  இவரது நடிப்பில் வெளியான டான் மற்றும் டாக்டர் ஆகிய திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகமாகவே காணப்படுகின்றது.

மேலும் இவரது நடிப்பில் இறுதியாக மாவீரன் திரைப்படம் வெளியானது,இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அடுத்து இவரது நடிப்பில் அயலான் என்னும் திரைப்படம் வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் தயாராகியுள்ள இப்படம் Sci-Fi கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது.


தொடர்ந்து இவரின் 21வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க சாய் பல்லவி நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள நிலையில் விரையில் படத்தின் பெயர் அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது.


இந்த நிலையில் படத்தின் லீக்கான காட்சி என்னவென்றால் சாய்பல்லவி மற்றும் அவரது குழந்தை, சிவகார்த்திகேயனுக்காக காத்திருப்பதாக காட்சிகள் அமைந்துள்ளன.இதனால் சிவகார்த்திகேயன் முதன்முறையாக அப்பா மற்றும் கணவன் ரோலில் நடித்திருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement