கேரளாவை உலுக்கி வரும் ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து பேசிய நடிகை காஜல் பசுபதி, இந்த கமிஷன் கேரளாவில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். பல பெண்கள் துணிந்து புகார் கொடுத்து இருப்பார்கள் என்று பேட்டியில் கூறியுள்ளார்.
உண்மையில் இது பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான், ஆனால், இந்த பிரச்சனை கேரளாவில் மட்டும் இல்லை, பெண்கள் எங்கெங்கு வேலை செய்கிறார்களோ அங்கு எல்லாம் உள்ளது. இது கேரளாவில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் பெண்கள் புகார் கொடுக்கலாம் என்று இருந்தால் இன்னும் பலர் முன் வந்து புகார் கொடுத்து இருப்பார்கள்.
நாம் திரையில் பார்த்து பிரம்மித்துப்போன ஒரு இயக்குநரின் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்காக சென்று இருந்தேன். அப்போது அவர், கையை பிடித்து குலுக்கி, விரலால் சுரண்டி அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஓகேவா என்று சிக்னல் கொடுத்தார். அது எனக்கு புரிந்துவிட்டது, இருந்தாலும் எதுவும் பேசவில்லை. இந்த பத்துநாள் ஷூட்டிங்கும் போய்விடும் என்று அமைதியாக இருந்துவிட்டேன். இப்படி பெரிய இயக்குநர்களே சில நேரம் அசிங்கமாக நடந்துக் கொள்வார்கள்.
பெண்கள் எல்லா இடத்தில் தைரியமாக இருக்க வேண்டும், அவர்களுக்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுப்பதற்கு பதிலாக கராத்தே கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும் என்று நடிகை காஜல் பசுபதி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
Listen News!