• May 18 2024

ரட்சிதா-ரபேர்ட் பிரச்சனையால் பொங்கியெழுந்த அமுதவாணன்-பிக்பாஸ் வீட்டுக்குள் முட்டி மோதும் போட்டியாளர்கள்-வெளியானது வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக்பாஸ் 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.ஒவ்வொரு வாரமும் முழுக்க முழுக்க பல திருப்புமுனைகளுடன் தான் இந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.

விறுவிறுப்பு நிறைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியும் டாப் கியரில் சென்று கொண்டிருப்பதால் ரசிகர்களும் இதனை அதிகம் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

அதாவது வழக்கம் போல காதல் கிசுகிசு இந்த சீசனிலும் நடைபெற்று வருகின்றது.அதில் ஒரு ஜோடி பிரிந்து மற்றுமொரு ஜோடி சேர காத்து இருக்கிறது என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.அது வேற யாரும் இல்லை ராபேர்ட் மற்றும் ரட்சிதா.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் விக்ரமன் மற்றும் அமுதவானன் இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.நீங்க ஒண்டு சொன்னா ஜாலி எடுத்துக்கிறீங்க...அதே நான் ஒன்று சொன்னா அதை சீரியஸா எடுத்து பிரச்சனை பண்ணுறீங்க என அமுதவாணன் கத்துகிறார்.நேற்று ஒரு பிரச்சனை நடந்துச்சு அமுதா கேட்டு சொல்லுங்க எண்டு சொன்னீங்க.அது தான் என் வேலையா எனக் கேட்க விக்ரமன் அது நான் கேட்கவில்லை என சமாளிக்கின்றார்.இது பொய் என அமுதவாணன் கூறுகின்றார்.

இப்படிக் கூற அப்ப நாங்க பேசவே கூடாதா என ரட்சிதாவும் டென்சன் ஆகுறார்.அதன் பிறகு அமுதவானண் அவங்கட பேர்சனல் நான் கேட்க முடியாது தேவை எண்டா நீங்க கேட்டு தெரிஞ்சு கொள்ளுங்க என விக்ரமனை திட்டிவிடுகின்றார்.இதைப் பார்த்த ரசிகர்கள் பெரிய சண்டை வெடிக்கப்போகின்றது என கூறி வருகிறார்கள்.

இதோ அந்த ப்ரமோ... 




Advertisement

Advertisement